இந்த நடிகரை உங்களுக்கு நினைவு இருக்கா? பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
சுமன் செட்டி
தெலுங்கில் வெளிவந்த ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சுமன் செட்டி. அதே படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து தமிழிலும் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து குத்து, 7ஜி ரெயின்போ காலனி, படிக்காதவன் என பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவை விட இவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், பெரிதளவில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு தமிழில் கிடைக்கவில்லை.
இப்போது எப்படி இருக்கிறார்
இந்த நிலையில், நடிகர் சுமன் செட்டி தற்போது தெலுங்கில் தொடங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
அவருடைய சமீபத்திய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இவரை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அட ஜெயம் படத்தில் நடித்த நடிகரா இது என கேட்டு வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்க..