ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல்- தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயிலர்
சன் பிக்சர்ஸ் எந்த ஒரு படத்தை ரிலீஸ் செய்தாலும் அதை படு மாஸாக வெளியிட்டு அதிக கலெக்ஷனையும் பெறுவார்கள்.
அப்படி அண்மையில் அவர்கள் ரூ. 200 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் ரஜினி, தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பல முன்னணி நடிகர்கள் நடிக்க தயாரித்த திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப்குமார் மிகவும் தரமான கதையை வைத்து ரஜினியை வைத்து இயக்கி இப்போது வெற்றியும் கண்டுள்ளார்.
படமும் வெளியாகி நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் கொண்டாட்டத்தில் தான் உள்ளார்கள்.

உண்மையான கலெக்ஷன்
ஜெயிலர் படத்தின் வசூல் வேட்டை குறித்து நிறைய தகவல்கள் தர தற்போது சன் பிக்சர்ஸ் படம் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளனர்.
படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 375.40 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வசூல் விவரமும் தற்காலிக விவரம் என்றும் மேலும் வசூல் வேட்டை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Alapparai kelappitom ???#JailerRecordMakingBO@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @mirnaaofficial @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @StunShiva8… pic.twitter.com/d0gvpwUwyy
— Sun Pictures (@sunpictures) August 17, 2023
ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்க ஜாக்கி ஷெராப் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?