படுதோல்வியடைந்த பிறகும் அதே ஹீரோ, இயக்குனருடன் கைகோர்க்கும் சன் பிக்சர்ஸ்..
சன் பிச்சர்ஸ்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பு நிறுவனமாக என்ட்ரி கொடுத்தது சன் பிக்சர்ஸ். எந்திரன் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து விஜய்யின் சர்கார் படத்தை தயாரித்திருந்தது.
இதை தொடர்ந்து தற்போது பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை தயாரித்து வருகிறார் சன் பிக்சர்ஸ். சமீபத்தில் வெளிவந்த ரஜினிகாந்தின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட் ஆகிய மூன்று திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
புதிய கூட்டணி
இந்நிலையில், இதில் தளபதி விஜய்யுடன் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அப்படத்தை இயக்க பிரபல முன்னணி இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த என இரு திரைப்படங்களும் தோல்வியை தழுவியுள்ள நிலையில், மீண்டும் அதே நட்சத்திரங்களுடன் சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஜீ தமிழின் ஹிட் சீரியல், ரசிகர்கள் ஷாக்- எந்த தொடர் தெரியுமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
