8 வருடங்களுக்கு மேல் ஓடிய சீரியலுக்கு எண்டு கார்டு! சன் டிவி ரசிகர்கள் அதிர்ச்சி
சன் டிவியில் கடந்த 8 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சீரியல் விரைவில் முடியப்போகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் தற்போது சன் டிவி தான் டிஆர்பியில் நம்பர் 1. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் அதிகம் ரேட்டிங் பெற்று டாப் 5 லிஸ்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
அதிலும் அந்த சேனலில் கடந்த 8 ஆண்டுகளாக மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலுக்கும் அதிகம் ரசிகர்கள் தற்போதும் இருக்கிறார்கள்.
முடியப்போகும் சந்திரலேகா
இந்நிலையில் தற்போது சந்திரலேகா விரைவில் முடியப்போகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது வரை 1921 எபிசோடுகள் இந்த தொடர் ஒளிபரப்பாகி இருக்கிறது.
இந்த தகவல் சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
தளபதி 67 விஜய்க்கு வில்லனாகும் முன்னணி இயக்குநர்! இப்போதே வெளியான தகவல்