முடிவை நோக்கி நகர்கிறது சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்- வருத்தப்படும் ரசிகர்கள்
சன் தொலைக்காட்சி
சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு என்றே பெயர் போன ஒரு டிவி, காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை தொடர்ந்து தொடர்கள் ஒளிபரப்பாகிறது, இடையில் மட்டும் ஒரு திரைப்படம் ஒளிபரப்பாகும்.
எனவே இதில் ஏகப்பட்ட தொடர்கள் வருகின்றன, TRPயில் இந்த தொலைக்காட்சி தொடர்கள் தான் டாப்பில் இருக்கும். தற்போது சன் டிவி சீரியலில் டாப்பில் இருக்கும் ஓரு தொடர் முடிவை நோக்கி பயணிப்பதாக தகவல் வந்துள்ளது.
முடிவுக்கு வரும் தொடர்
கயல், சுந்தரி, எதிர்நீச்சல், வானத்தை போல, கண்ணான கண்ணே போன்ற சீரியல்கள் நன்றாக ஓடுகிறது.
தற்போது கண்ணான கண்ணே என்ற தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தொடர் ரசிகர்கள் செய்தி கேட்டதும் கொஞ்சம் வருத்தம் அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வாரிசு, துணிவு பட முதல் நாள் வசூல் விவரம்- அதிகம் வசூலித்தது இந்த படமா?