எழில் யார் கழுத்தில் தாலி கட்டினார் பாருங்க.. கயல் சீரியலில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
கயல் சீரியல்
சன் டிவியில் தற்போது நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது கயல். தற்போது எழில் திருமண காட்சிகள் தான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கயல் கடத்தப்பட்ட நிலையில் அவரை எழில் காப்பாற்றி கூட்டிவருகிறார். அதன் பின் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு வில்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்கிறார். அல்லது கன்னத்தில் அரை வாங்கி கொள்ளும்படி கூறுகிறார். இது நடக்கவில்லை என்றால் திருமணத்தை நிறுத்திவிடுவேன் என எழில் கூறியதால் மன்னிப்பு கேட்கின்றனர்.
யார் கழுத்தில் தாலி கட்டினார் எழில்?
திருமண சடங்குகள் தொடங்கி நடக்கிறது. தாலியை `எல்லோரும் ஆசிர்வதித்து கொடுக்க அதை மாப்பிள்ளை எழில் கையில் கொடுக்கிறார் ஐயர். இதனோடு இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.
இந்நிலையில் தற்போது ஒரு போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பெண் கழுத்தில் கட்டாமல் பின்னால் இருக்கும் கயல் கழுத்தில் தாலியை கட்டி விடுகிறார் எழில்.
இது நடக்கும் என எதிர்பார்த்தது தான் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் இது கனவு என நாளைய எபிசோடில் காட்டிடாதீங்க என சிலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read: கமல்ஹாசன் போன் செய்து அழைத்தும் பிக் பாஸ் வர மறுத்த பிரபல ஹீரோ!
You May Like This Video


உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
