விஜய் மீது கோபத்தை காட்டியதா சன் டிவி.. உண்மை இதுதான்..
இசை வெளியிட்டு விழா
சமீபத்தில் திரையுலகில் நடந்து முடிந்த பிரம்மாண்ட நிகழ்வுகளில் ஒன்று ஜவான் இசை வெளியிட்டு விழா. இந்த விழாவில் படத்தில் நடித்த நயன்தாராவை தவிர்த்து மற்ற அனைவரும் கலந்துகொண்டனர்.
ஜவான் இசை வெளியிட்டு விழாவை நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தனர். ஆனால், இசை வெளியிட்டு விழாவில் விஜய் குறித்து அட்லீ பேசிய விஷயங்கள் சன் டிவியில் ஒளிபரப்பு ஆகும் போது வரவில்லை என்றும், விஜய் மீது சன் டிவி கோபத்தை இப்படி காட்டிவிட்டது என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர்.
உண்மை இதுதான்
ஆனால், இந்த நிகழ்ச்சியை எடிட் செய்தது சன் டிவி கிடையாதாம். 2 மணி நேரம் ஜவான் இசை வெளியிட்டு விழாவை ஒளிபரப்ப மட்டுமே அனுமதி கொடுத்துள்ளனர்.
இந்த இசை வெளியிட்டு விழாவை எடிட் செய்தது கோகுலம் சினிமாஸ் தானாம். இதனால் சன் டிவிக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த ஒரு சம்மந்தம் இல்லை என தெரியவந்துள்ளது.