திடீரென நிறுத்தப்பட்ட சன் டிவி சீரியல்! காரணம் இதுதான்.. நடிகர் கிருஷ்ணா காட்டம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தாலாட்டு சீரியல் சமீபத்தில் நிறைவு பெற்றது. சுமாரான ரேட்டிங் பெற்று வந்த அந்த சீரியலை திடீரென முடித்தது ஏன் என ரசிகர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
தாலாட்டு சீரியலில் ஹீரோவாக கிருஷ்ணா நடித்து இருந்தார். அவர் தெய்வமகள் சீரியல் மூலமாக புகழ் பெற்றவர். தற்போது அவர் சன் டிவி பற்றி காட்டமாக பேட்டி அளித்து இருக்கிறார்.
நல்ல ஓடிட்டு இருந்த சீரியலை முடிச்சிட்டாங்க..
சீரியல் நன்றாக ஓடிட்டு இருந்த நேரத்தில் திடீரென முடிந்துவிட்டது எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் வரை நிச்சயம் சீரியல் ஓடும் என முதலில் கூறினார்கள். ஆனால் தற்போது திடீரென முடித்து இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என எங்களுக்கே தெரியாது.
அடுத்து பல புது சீரியல்கள் தயாராக இருப்பதாக சொன்னார்கள். அதற்காக தான் தாலாட்டு சீரியல் முடிக்கப்பட்டு இருக்கிறது என நினைக்கிறேன் என கிருஷ்ணா கூறி இருக்கிறார்.
ஏடாகூட கேள்வி.. சனம் ஷெட்டி கூலாக கொடுத்த பதிலடி