ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு
ரஜினி - கமல் படம்
தமிழ் சினிமாவின் பெருமை ரஜினிகாந்த், கமல் ஹாசன். இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது.

அதுவும் இயக்குநர் சுந்தர் சி இப்படத்தை இயக்கப்போகிறார் என அறிவிப்பு வீடியோவை வெளியிட்டனர். இது கமல் - ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. ஆனால், தற்போது மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
13 Years of Thuppakki: பிளாக்பஸ்டர் துப்பாக்கி படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
சுந்தர் சி திடீர் விலகல்
ரஜினி - கமல் இணையும் இப்படத்தை தான் இயக்கவில்லை, படத்திலிருந்து வெளியேறுகிறேன் என்று சுந்தர் சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிப்பு வெளிவந்து சில நாட்களே ஆகும் நிலையில், படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி வெளியிட்டுள்ள அறிக்கையை வெளியிட்டுள்ளார். சுந்தர் சி-க்கு பதிலாக வேறு யார் ரஜினியின் 173வது படத்தை இயக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.