சுந்தரா டிராவல்ஸ் பட நடிகையா இது, சீரியலில் நடிக்கிறாரா?- நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கவந்த நாயகி
சுந்தரா டிராவல்ஸ்
அசோகன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு முரளி மற்றும் வடிவேலு அசத்தலான காமெடியில் வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். ஒரே ஒரு பஸ் அதைவைத்து கதை மிகவும் காமெடியாக செல்லும்.
அதிலும் முரளி மற்றும் வடிவேலு காம்பினேஷன் படத்தில் அட்டகாசமாக இருக்கும். தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி படங்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் இந்த படம் கண்டிப்பாக இடம்பெறும்.

பட நாயகி
இந்த படத்தில் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ராதா. இவரின் முதல் படமே இதுதான், அதன்பிறகு Game, அடாவடி, காத்தவராயன் போன்ற சின்ன சின்ன படங்களில் நடித்திருந்தார்.
தற்போது இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாவில் நடிக்க வந்துள்ளார், அதுவும் சின்னத்திரையில் தான்.
விஜய் தொலைக்காட்சியில் புதியதாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 தொடரில் தான் வில்லியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
44 வயதிலும் இளம் நடிகைக்கு சவால் விடும் நடிகை மஞ்சு வாரியர் போட்டோ ஷுட்- அசந்துபோன ரசிகர்கள்