சுந்தரி சீரியல் நடிகர் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி! என்ன நடந்தது
பிரபல மலையாள நடிகர் திலீப் ஷங்கர் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து இருப்பவர். தமிழில் ஹிட் ஆன சுந்தரி சீரியல் கதை மலையாளத்தில் அதே பெயரில் எடுக்கப்பட்டது. அதில் திலீப் ஷங்கர் நடித்து இருக்கிறார்.
அவர் தற்போது ஹோட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹோட்டலில் மரணம்
திலீப் ஷங்கர் தற்போது Panchagni என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில், ஷூட்டிங்கில் இருந்து இரண்டு நாட்கள் பிரேக் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
நான்கு நாட்களுக்கு முன்பு அவர் திருவனந்தபுரத்தில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருக்கிறார். அவர் இரண்டு நாட்களாக வெளியில் வராத நிலையில் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அவர் பிணமாக கிடந்து இருக்கிறார்.
போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். அதன் விவரங்கள் வந்தால் தான் இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறி இருக்கின்றனர்.