ரீ ரிலீஸ் ஆகும் வடிவேலுவின் கிளாசிக் ஹிட் படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் நகைச்சுவை விருந்து
ரீ ரிலீஸ்
சமீபகாலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் பெருகி வருகிறது. கில்லி, பாபா, ஆளவந்தான், சச்சின் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.
சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் ரூ. 10 கோடி வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வருகிற மே 1 அஜித்தின் பில்லா, வீரம் ஆகிய படங்களும் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.

திருமணத்திற்கு பிறகு வந்த ஸ்பெஷல் டே, Heart Smiley பறக்க விட்ட தொகுப்பாளினி பிரியங்காவின் கணவர்.. என்ன தெரியுமா?
சுந்தரா டிராவல்ஸ்
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் கிளாசிக் ஹிட் படங்களில் ஒன்றான சுந்தரா டிராவல்ஸ் படமும் ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகன் மறைந்த நடிகர் முரளியுடன் இணைந்து, இப்படத்தில் வடிவேலு நகைச்சுவை கதாபத்திரத்தில் அசத்தியிருப்பார்.
இவர்கள் இருவருடைய கம்போ வேற லெவலில் ஒர்கவுட் ஆகியிருக்கும். இப்படத்தை இயக்குநர் தாஹா இயக்கியிருந்தார்.
2002ல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை தற்போது 23 ஆண்டுகள் கழித்து மே மாதம் ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ரீ ரிலீஸ் ஆகும் நாளன்று கண்டிப்பாக திரையரங்கில் நகைச்சுவை விருந்து காத்திருக்கு.