என் மீது தவறான கருத்துக்கள் வந்தால் நான் இதை தான் செய்வேன்: சன்னி லியோன்
சன்னி லியோன்
இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். பல ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவர், தற்போது 'ஓ மை கோஸ்ட்' தமிழ் படத்தில் நடித்துள்ளார்.
இதில் சதீஷ், ஜிபி முத்து, தர்ஷா குப்தா என பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாக உள்ளது.
தவறான விமர்சனம்
இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னை வந்த அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், "உங்கள் மீது வரும் தவறான விமர்சனங்களை எவ்வாறு எடுத்து கொள்கிறீர்கள்?" என்று கேட்டுள்ளனர். பதில் அளித்த அவர், "நான் என் மீது வரும் தவறான கருத்துக்களை எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.”
”பாசிட்டிவாக நிறைய விஷயங்கள் இருக்கும் போது எதற்கு நெகட்டிவ்வான கருத்துக்ளை பார்க்க வேண்டும் . என்னை சுற்றி இருப்பவர்கள் நல்ல கருத்துக்களை மட்டும் தான் என்னிடம் கொண்டுவருவார்கள். என்னை பற்றி தெரியாதவர்கள் என் மீது தவறான கருத்தை வைக்கும் போது அதை நினைத்து ஏன் வருத்தப்பட வேண்டும்" என கூறினார்.
அடையாளம் தெரியாமல் மாறிப்போன மாரி 2 வில்லன்! அவரா இது?

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
