அடையாளம் தெரியாமல் மாறிப்போன மாரி 2 வில்லன்! அவரா இது?
டோவினோ தாமஸ்
மாரி 2 படத்தில் தனுஷின் வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் டோவினோ தாமஸ். சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து அந்த படத்தில் அவர் மிரட்டலாக நடித்து இருப்பார். அந்த படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை.
தற்போது மலையாள சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் அவர். கடந்த வருடம் அவர் நடித்து இருந்த மின்னல் முரளி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
லேட்டஸ்ட் லுக்
தற்போது டோவினோ தாமஸ் Adrishya Jalakangal என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் நடித்த அனுபவம் பற்றி பேசி இருக்கும் அவர் சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
அதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். அவரா இது என அவரது லுக்கை பார்த்து ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.


