குழந்தைகள் பெற்றுக்கொள் முடியவில்லை! மனம் திறந்து பேசிய நடிகை சன்னி லியோன்
சன்னி லியோன்
பாலிவுட் திரையுலகம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சன்னி லியோன். டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை சன்னி லியோன், கடந்த 2017ம் ஆண்டு நிஷா கவுர் வெபர் என்ற மகளை தத்தெடுத்தார்.அதன்பின் 2018ம் ஆண்டு நோவா, ஆஷர் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை Surrogacy மூலம் அவருக்கு பிறந்தனர்.

மனம் திறந்து பேசிய நடிகை
இந்த நிலையில், குழந்தைகளை வளர்ந்து குறித்தும் தாய்மை குறித்தும் மனம் திறந்து நடிகை சன்னி லியோன் "எனது 38 வயதில் நான் திருமணமாகி குடும்பம் வாழ்க்கையை ஆரம்பித்தபோது எனக்கு குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் ஆசை வந்தது. 6-10 மாதங்கள் இயற்கையாகவே குழந்தைகள் பெற்றுக்கொள் முயற்சி செய்தோம்".

"ஆனால், நான் கற்பமானபோது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்தவித வளர்ச்சியும் இல்லை. குழந்தை பெற்றுக்கொள்வது கஷ்டம் என்று மருத்துவர்களை கூறிவிட்டனர். செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற பல முயற்சிகளை செய்துபார்த்தோம் பலன் இல்லை. கடவுள் எனக்கு குழந்தை பெரும் வாய்ப்பை கொடுக்கவில்லை என வருத்தப்பட்டேன்".

"ஆனால், அப்போதுதான் நாம் ஏன் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க கூடாது என்கிற யோசனை வந்தது. நிஷா கௌர் வெபர் எங்களுக்கு மகளாக கிடைத்தார். அதன்பின் Surrogacy முறையில் நோவா, ஆஷர் என இரட்டை குழந்தைகள் கிடைத்தனர். கடவுள் எங்களை மிகவும் நேசிக்கிறார் என்று இப்போது உணர்கிறேன்" என சன்னி லியோன் பேசியுள்ளார்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    