விஜய்
நடிகர் விஜய்யை வைத்து படம் தயாரிக்க பல முன்னணி தயாரிப்பாளர்கள் வெயிட்டிங். தற்போது தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் அவர் நடிக்கிறார்.
இந்த படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. லோகேஷ் கதை பணிகளை முடித்தபிறகு தான் தளபதி 67 தொடங்கும் தேதி பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் குட் பிலிம்ஸ்
தற்போது நடிகர் ஜீவாவின் அப்பா ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் அதன் 100வது படமாக விஜய்யின் படத்தினை தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. அது தளபதி 68 படத்திற்காக தான் என தெரிகிறது.
பேச்சுவார்த்தை நடக்கிறது என்கிற விஷயத்தை நடிகர் ஜீவா தான் தெரிவித்து இருக்கிறார். விஜய் நடிக்க ஒப்புக்கொண்டால் தானும் அதில் சம்பளம் வாங்காமல் நடிக்க போகிறேன் என்றும் ஜீவா கூறி இருக்கிறார்.

நீயா நானா விவகாரம்: https://cineulagam.com/article/kavignar-thamarai-support-neeya-naana-wife-1662975669ட்ரோலுக்கு உள்ளான மனைவிக்கு ஆதரவாக பேசிய பிரபலம்
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri