விஜய்யின் லியோ படத்தை இதுவரை இத்தனை லட்சம் பேர் பார்த்துள்ளார்களா?
விஜய்யின் லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் லியோ. Seven Screen Studio தயாரிக்க இப்படம் ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரானது.
விஜய்யை தாண்டி த்ரஷா, மடோனா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் என நிறைய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைப்பில் வெளியான இப்பட பாடல்களும் செம ஹிட் தான்.
15 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கு வசூல் சாதனை செய்துள்ளது, இனிமேலும் நல்ல வசூல் வரும் என்கின்றனர்.
பிரபலத்தின் தகவல்
கடந்த அக்டோபர் 19ம் வெளியான இப்படத்தை தமிழகத்தில் இதுவரை 90 லட்சம் பேர் பார்த்துள்ளனராம். அதேபோல் பொன்னியின் செல்வன் படத்தை 1.6 கோடி பேர் பார்த்துள்ளார்களாம். இந்த படத்தை விஜய்யின் லியோ பீட் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.