சூப்பர் சிங்கரில் மிஸ்கின் செய்த தரமான செயல்.. நெகிழ்ச்சியில் மக்கள்! என்ன தெரியுமா?
சூப்பர் சிங்கர்
பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் ரசிக்கும் விதமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அவ்வப்போது புதிய கான்செப்டுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள், ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் 11வது சீசனின் கான்செப்ட் மொத்தமாக மாற்றப்பட்டது.
தரமான செயல்
இந்நிலையில் திஷாந்தனா, பானா காத்தாடி படத்தின் என் நெஞ்சில் பாடலை பாடி முடித்துவிட்டு, தான் எங்கிருந்து வந்தேன் என்ன செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும், அப்பெண்ணின் தந்தை, என் மகள் மருத்துவம் படிக்கிறாள், எங்களால் பணக்கட்ட முடியவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், chemotherapy-கு 1. 30 லட்சம் கட்டுகிறார்கள் என்று கூறினார் அப்பெண்.
அதற்கு மிஸ்கின், இனிமேல் உன்னுடைய பள்ளி செலவு அனைத்தும் நான் தான் கட்டப்போகிறேன் என்றதும் அரங்கில் இருந்த அனைவரும் உருகி கண்ணீர் விட்டனர். மிஸ்கினின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.