சூப்பர் சிங்கர் 11 புகழ் சரணுக்கு யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த பரிசு... என்ன தெரியுமா?
சூப்பர் சிங்கர் 11
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர்.
பாடல் திறமை கொண்ட அனைவரும் கலந்துகொள்ள நினைக்கும் ஒரு ஸ்பெஷல் ஷோ. சீனியர்களுக்கான 11வது சீசன் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது, இசையமைப்பாளர் தமன், பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சூப்பர் சிங்கர் 11 நிறைய இசையோடு அதிகம் கலகலப்புடனும் ஒளிபரப்பாகி வருகிறது.
பரிசு
இந்த சீசனின் அப்படியே இளையராஜா போலவே பாடி மக்கள் மனதை கவர்ந்து வருகிறார் சரண்
கடைசியாக ஒளிபரப்பான இளையராஜா ஸ்பெஷல் ஷோவில் யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, கங்கை அமரன் மற்றும் விஜய் யேசுதாஸ் சிறப்பு நடுவர்களாக கலந்துகொண்டனர்.
இளையராஜா ஸ்பெஷல் ரவுண்டில் சரண் அசத்தலாக பாட யுவன் ஷங்கர் ராஜா அவருக்கு இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்ட்டை பரிசளித்து வாழ்த்தியுள்ளார்.