தனது மகனை பாட்டு பாடி அழகாக தூங்க வைக்கும் அஜய் கிருஷ்ணா- அவரது மனைவி வெளியிட்ட அழகிய வீடியோ
சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள், பெரியவர்கள் என தனித்தனியாக பல சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது.
தற்போது பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் பாடிவரும் போட்டியாளர்கள் சிலர் இப்போதே மக்களின் பேவரெட் நபர்களாக மாறிவிட்டார்கள்.
அஜய் கிருஷ்ணா
இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போலவே பாடி பலரையும் அசத்தியிருக்கிறார்.
தற்போது நிறைய கச்சேரிகள், திருமணங்கள் என பாடல்கள் பாடி வருகிறார். ஜெஸ்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அஜய் கிருஷ்ணாவுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
அவர் தனது மகனை பாட்டுபாடி தூங்க வைக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரது மனைவி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ கியூட் வீடியோ,
150 கோடியில் கட்டப்பட்டுள்ள தனுஷ் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க