பிரம்மாண்டமாக நடக்கப்போகும் சூப்பர் சிங்கர் 11வது சீசனின் Final... எப்போது தெரியுமா, வீடியோவுடன் இதோ
சூப்பர் சிங்கர் 11
விஜய் டிவி என்றாலே ஒரு சில ரியாலிட்டி ஷோக்கள் முதலில் நியாபகம் வந்துவிடும். அப்படி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு ஷோ தான் சூப்பர் சிங்கர்.
பாடும் திறமை கொண்டவர்களை தேடித்தேடி கண்டுபிடித்து அவர்களின் வாழ்க்கையை ஜொலிக்க வைக்கும் மேடையாக உள்ளது. இப்போது பட பாடல்கள், முன்னணி இசையமைப்பபாளர்களின் இசைக் கச்சேரிகளில் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் தான் அதிகம் உள்ளார்கள்.
விஜய்யில் கடந்த சில மாதங்களாக சூப்பர் சிங்கர் சீனியர்களுக்கான 11வது சீசன் ஒளிபரப்பாகி வந்தது.

பைனல்
கடந்த வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கப்பட்ட இந்த 11வது சீசன் பல அருமையான எபிசோடுகளை தாண்டி இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
24 போட்டியாளர்களில் இருந்து இறுதி மேடையில் பாடப்போகும் 7 பைனலிஸ்ட் தேர்வாகிவிட்டனர். நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலினி, சரண், தர்ஷனா மற்றும் ஆப்ரகாம் இந்த 7 பேர் தான் அந்த பிரம்மாண்ட பைனல் நிகழ்ச்சியில் பாட உள்ளார்கள்.
11வது சீசனிற்கான பிரம்மாண்ட பைனல் வரும் பிப்ரவரி 1ம் தேதி நடக்கவுள்ளதாம், Liveஆக ஒளிபரப்பாக இருப்பதாக வீடியோவுடன் அறிவிப்பு வந்துள்ளது.