சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். கிட்டதட்ட 20 ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சி, ஜூனியர் மற்றும் சீனியர் என இரண்டு பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்து, வெள்ளித்திரையில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளனர்.
ஸ்பூர்த்தி
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 4ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஸ்பூர்த்தி. சூப்பர் சிங்கர் சீசன் 4 எபிசோட் ஒன்றில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கலந்துகொண்டார். அப்போது ஸ்பூர்த்தி பாடிய பாடலை கேட்டு வியந்து போன் எஸ்.பி.பி அவரை புகழ்ந்து தள்ளினார். மேலும் ஸ்பூர்த்தியை மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட சரணத்தை பாடவைத்து கேட்டார்.
இந்த நிலையில், எஸ்.பி.பி-யால் பாராட்டப்பட்ட பாடகி ஸ்பூர்த்தி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா. அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், நம்ம சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியா இது என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..