முன்னணி இயக்குநருடன் இணைந்த சூப்பர் சிங்கர் பிரகதி.. ஆனால் இப்படி ஆகிருச்சே
சூப்பர் சிங்கர் பிரகதி
நம்முடைய சினிஉலகம் இணையதளத்தில் அவ்வப்போது Rewind செய்திகள் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று சூப்பர் சிங்கர் பிரகதி குறித்து Rewind தகவல் ஒன்றை பார்க்கலாம் வாங்க.
விஜய் தொலைக்காட்சியின் மாபெரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளனர். பிரகதி, திவாகர், செந்தில், ராஜலக்ஷ்மி, ஸ்ரீநிஷா, ரக்ஷிதா சுரேஷ், பிரியங்கா என லிஸ்ட்டை அடிக்கிக்கொண்டே போகலாம்.
இவர்களில் சூப்பர் சிங்கர் ஜூனியர் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்து, பின்னணி பாடகியாக சினிமாவில் களமிறங்கியவர் பிரகதி. பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்துபோகும் போன்ற பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
கைவிடப்பட்ட படம்
பின்னணி பாடகியாக வலம் வந்த இவர், இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகவிருந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டானார்.
சாட்டை படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த நடிகர் யுவன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தார். இப்படத்திற்கான போட்டோஷூட் கூட நடந்துள்ளது. ஆனால், திடீரென இப்படம் கைவிடப்பட்டுள்ளது.