வெளிவந்தது சூர்யா 45 படத்தின் அதிரடி அப்டேட்.. வேற லெவல் தான்
சூர்யா 45
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வண்டலூர் அருகே நடைபெற்றது என்பது தெரிந்தது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக சமீபத்தில் புகைப்படங்கள் வெளியானது.
அதிரடி அப்டேட்
இந்நிலையில், தற்போது இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது, சூர்யா அவரது 45 - வது படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சூர்யா, வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது மற்றொரு வேடத்தில் அய்யனார் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.