சூப்பர் சிங்கர் 11 சரண் ராஜாவிற்கு மிஷ்கின் ஏற்படுத்திக் கொடுத்த பெரிய வாய்ப்பு... சந்தோஷத்தின் உச்சத்தில் போட்டியாளர்
சூப்பர் சிங்கர் 11
சூப்பர் சிங்கர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் வெற்றிகரமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று.
இளைய தலைமுறைப் பாடகர்களுக்கு ஒரு சிறந்த மேடையை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இப்போது சூப்பர் சிங்கர் 11 நிகழ்ச்சியின் 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

மாகாபா ஆனந்த், பிரியங்கா தொகுத்து வழங்க மிஷ்கின், தமன், உன்னி கிருஷ்ணன், அனுராதா ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். இந்த வாரம் நடுவர்களில் இசையமைப்பாளர் டி.இமான் இணைந்துள்ளார்.

மிஷ்கின்
எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் நடுவர் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு வருகிறார், வேறு யாரு இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் தான்.
அவர் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்கள் பலருக்கு பரிசுகள் கொடுத்து வருகிறார். அப்படி இந்த வாரம் இளையராஜா போலவே பாடல்கள் பாடி அசத்திவரும் சரணுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று கொடுத்துள்ளார் மிஷ்கின்.

பாரீசிஸ் மதி என்ற எனது நண்பர் ஒருவர் உள்ளார், அவர் உன்னை அழைத்துள்ளார். அங்கே போய் நீ பாடு, பாஸ்போர்ட் எல்லாம் ரெடி செய் நான் உன்னை அனுப்பி வைக்கிறேன் என கூறி சரணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.