இளையராஜாவை நேரில் சந்தித்த சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜா... எமோஷ்னல் வீடியோ
சூப்பர் சிங்கர் 11
சூப்பர் சிங்கர், பல வருடங்களாக ரசிகர்கள் அதிகம் பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக உள்ளது.
சீனியர்-ஜுனியர் என மாறி மாறி நடக்கிறது, தற்போது சீனியர்களுக்கான 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நடந்த எந்த ஒரு சீசனிலும் இல்லாத மாற்றமாக போட்டியாளர் 4 குழுவாக பிரிந்து உள்ளனர்.
அவர்களுக்கு 4 நடுவர்கள் என வித்தியாசமான கான்செப்டுன் நிகழ்ச்சி நடக்கிறது.

சரண் ராஜா
இந்த 11வது சீசனில் அச்சு அசல் இளையராஜா குரலில் அவரது பாடல்களை பாடி மக்களை கவர்ந்துள்ளவர் தான் சரண் ராஜா.
கடந்த வார எபிசோடில் கங்கை அமரன் வந்தபோது சரண் இளையராஜா பாடலை பாட அவர் மெய்சிலிர்த்து கேட்டுக் கொண்டிருந்தார்.
பின் உனக்கு ஏதாவது ஆசை இருந்தால் கூறு நிறைவேற்றுகிறேன் என கங்கை அமரன் கூற அவர் இளையராஜாவை ஒருமுறை தொட்டுப் பார்க்க வேண்டும், அதுதான் என்னுடைய கனவு, லட்சியம் என்றார்.

உடனே கங்கை அமரன் அண்ணனிடம் கேட்டுவிட்டு அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார். அவர் சொன்னதை செய்தும் காட்டியுள்ளார், சரண் ராஜாவை, இளையராஜாவை காண வைத்துள்ளார்.
இதோ சரண் ராஜா, இளையராஜாவை சந்தித்த தருணத்தின் வீடியோ,