எங்களுக்கு நிறைய கடன் இருக்கு, சொந்த ஊருக்கே செல்ல வேண்டியது தான்- சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி
சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நிறைய கலைஞர்களுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளது. அப்படி இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு ராஜலட்சுமி என்ன மச்சான் சொல்லு புள்ள என்ற பாடலை பாடியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் கலக்கினார். அதன்பிறகு தொடர்ந்து பாடல்கள் பாடிய வரும் ராஜலட்சுமி தனது கணவர் செந்திலுடன் இணைந்து வெளிநாடு சென்றும் பாடி வருகிறார்.
புஷ்பா படத்தில் வாயா சாமி என்ற பாடலை பாடி பெரிய ரீச் பெற்றார் ராஜலட்சுமி. தற்போது செந்தில் மற்றும் ராஜலட்சுமி இணைந்து இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.
ராஜலட்சுமியின் பேச்சு
ராஜலட்சுமி இப்போது License என்ற படத்தில் நடித்து இருக்கிறார், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கூட சமீபத்தில் நடந்தது. ராஜலட்சுமி அண்மையில் ஒரு பேட்டியில், எங்களுடைய தொழிலில் நிறைய சவால்கள் உள்ளது, வாழ்க்கையிலும் பிரச்சனை உள்ளது.
கணவருடன் பிரச்சனை என்றால் அவருடன் பேச வேண்டும், மீடியாவிற்கு கொண்டு வரக்கூடாது. நாங்கள் நன்றாக வளர்ந்துவிட்டோம் என்றெல்லாம் விமர்சனம் வருகிறது, வீடு-கார் என எல்லாமே நாங்கள் லோன் போட்டு தான் வாங்கினோம்.
கொரோனா காலத்தில் நிகழ்ச்சி இல்லை, கையில் பணமும் இல்லை, அதை கடந்து இப்போது வாழ்ந்து கொண்டு வருகிறோம்.
கடன் வாங்கி செலவு செய்துள்ளோம், கொரோனா காலகட்ட சூழல் போல் வந்தால் என்ன செய்வது என கணவரிடம் கேட்டால், லோன் கட்ட முடியவில்லை என்றால் பேங்க்கு கொடுத்துவிட்டு நம்ம கிராமத்தில் உள்ள சொந்த வீட்டுக்கு போலாம் என்று கூறுவார்.
எங்களுக்கும் நிறைய பிரச்சனைகள் எல்லாம் இருக்கிறது என கூறி இருக்கிறார்.
பிரபல காமெடி நடிகர் ஜனகராஜின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா?

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
