சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹாலிவுட் பாப் பாடகியுடன் இருக்கும், இந்த போட்டோவை பார்த்துள்ளீர்களா !
எதிர்பார்ப்பில் தலைவர் 169
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர் ஸ்டாராகவும் பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
இன்று தமிழ் சினிமா இவ்வளவு பிரபலமாகவும் பெரிய மார்க்கெட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
அப்படியானா புகழ்களை பெற்றுள்ள ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த. ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை, இதனால் அப்படம் தோல்வியை தழுவியது.
மேலும் அடுத்து ரஜினிகாந்த் முதல்முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவரின் 169 படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் மூலம் மீண்டும் சூப்பர் ஸ்டார் Come Back கொடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

அரிதான போட்டோ
இந்நிலையில் முன்னணி நட்சத்திரங்களின் எந்தஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்களை கவர்வது வழக்கம்.
அப்படியொரு புகைப்படம் தான் இணையத்தில் ரசிகர் ஒருவரால் பகிரப்பட்டுள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹாலிவுட் பாப் பாடகி Samantha Fox உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் அந்த புகைப்படம் ரஜினி நடித்த முதல் ஹாலிவுட் திரைப்படமான Blood Stone படத்தின் போது எடுக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

மாஸ்ஸாக தொடங்கிய பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ! வெளியான அன்ஸீன் போட்டோ..