பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யம்.. இரவில் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி விஷயம்
பிக் பாஸ் 6
பிக் பாஸ் வீட்டில் நேற்று பிக் பாஸ் கொடுத்த டாஸ்கின் விதிமுறையின்படி போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய நால்வர் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள்.
இரவு முழுவதும் தூங்காமல், கொசுக்கடியால் அவர்கள் எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதே சமையம் வீட்டிற்குள் இருந்து போட்டியாளர்கள் நன்றாக உறங்கி கொண்டிருந்தார்கள். ஆனால் அதில் ரச்சிதா மட்டும் சீக்கிரமாகவே எழுந்துவிட்டார்.
வீட்டில் அமானுஷம்
வெளியே வந்த ரச்சிதாவிடம் வெளியே படுத்திருந்த நான்கு பெரும், ஏன் இவ்வளவு சீக்கிரமாக எழுந்துவிட்டீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதற்க்கு ரச்சிதா என்னால் தூங்க முடியவில்லை, தூங்கும் பொழுது தீடீரென சத்தங்கள் வருகிறது.
ஜி.பி. முத்து அண்ணா சிரிப்பது போல் சத்தம் கேட்டது. எழுந்து பார்த்தேன், அவர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். அதே போல் மற்றவர்களின் சத்தமும் கேட்டது. மீண்டும் எழுந்து பார்த்தேன் அனைவரும் தூங்கி கொண்டு தான் இருந்தார்கள். இதனால் தான் என்னால் நன்றாக தூங்க முடியவில்லை. என்று கூறியுள்ளார்.
பதறிப்போன போட்டியாளர்கள்
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறது என்று செய்திகள் ஊடகங்களில் உலா வரும் நிலையில் ரச்சிதா இப்படி கூறியுள்ளது அனைவரின் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குறிப்பாக ரச்சிதா இப்படி கூறியவுடன் நிவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகியோர் சற்று பதறிப்போனார்கள்.