"நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான்".. மாஸாக புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த வேட்டையன் மாபெரும் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன்பின், ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
புத்தாண்டு வாழ்த்து
இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு என்பதால் தனது ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்." என கூறியுள்ளார். தனது பாட்ஷா பட பாணியில் செம மாஸாக ரஜினி தெரிவித்துள்ள வாழ்த்து வைரலாகி வருகிறது.
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்.
— Rajinikanth (@rajinikanth) January 1, 2025
கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025