ஜெயிலர் படத்திற்காக குறைவான சம்பளத்தை பெற்றாரா நடிகர் ரஜினிகாந்த்?- இத்தனை கோடி தான் வாங்கினாரா?
நடிகர் ரஜினிகாந்த்
அண்ணாத்த படம் நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக நடித்தது. சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்த இப்படம் சரியான வசூலை பெறவில்லை.
விமர்சன ரீதியாகவும் படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை, அதன்பின் கொஞ்சம் இடைவேளைக்கு பிறகு தான் ரஜினி ஜெயிலர் படத்தில் கமிட்டானார்.
நெல்சன் திலீப்குமார் இயக்க ரஜினி நடித்துவந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
பிரபலத்தின் சம்பளம்
காவாலா என்ற பாடல் வெளியாகி பட்டய கிளப்பியது, ஆடியோ வெளியீட்டு விழாவும் சூப்பராக படு பிரம்மாண்டமாக நடந்தது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி படமும் உலகம் முழுவதும் வெளியாக இருக்க தயாரிப்பு குழு புரொமோஷன் வேலைகள் படு மாஸாக செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்காக நடிகர் ரஜினி வாங்கிய சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்காக ரூ. 100 கோடி சம்பளம் வாங்கினார் என சில தகவல்கள் தெரிவிக்க அவர் ரூ. 75 கோடி தான் ஜெயிலர் படத்திற்காக வாங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் கூறுகின்றனர்.
அவர் இந்த அளவுக்கு கம்மி சம்பளம் வாங்கியதற்கு அண்ணாத்த படத்தின் தோல்வி தான் காரணமாம்.
பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தானா?- புகைப்படத்துடன் இதோ

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
