முதன் முதலில் ஜெயிலர் படத்தில் ரொமான்ஸ் இல்லை என கூறி ரிஜெக்ட் செய்த சூப்பர்ஸ்டார்.. பின் என்ன நடந்தது தெரியுமா
ஜெயிலர்
அடேங்கப்பா என வாய்யடைத்துப்போக வைத்தது ஜெயிலர் படத்தின் வசூல். இதுவரை ரூ. 600 கோடிக்கும் மேல் வசூலில் கடந்துள்ள ஜெயிலர், தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக கருதப்படுகிறது.
மாபெரும் பட்ஜட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகவே இருந்தாலும் கூட, அதை டபுள் மடங்கிற்கும் மேலாக வசூல் செய்து கொடுத்துள்ளது. ஜெயிலர் படத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ. 250 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்திருக்கும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ரிஜெக்ட் செய்த சூப்பர்ஸ்டார்
இப்பேற்பட்ட மாபெரும் படத்தை முதன் முதலில் சூப்பர்ஸ்டார் ரிஜெக்ட் செய்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. அட நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சொல்லவில்லை, தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிரஞ்சீவியை தான் சொல்றோம்.
ஆம், முதன் முதலில் ஜெயிலர் படத்தின் கதையை சிரஞ்சீவியிடம் தான் நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளாராம். ஆனால், படத்தில் பாடல்கள் இல்லை, ரொமான்ஸ் இல்லை என கூறி நெல்சன் திலீப்குமாரை கொஞ்சம் காலம் காத்திருக்கும்படி கூறியுள்ளார் சிரஞ்சீவி.
ஆனால், அதன்பின் இந்த கதையை ரஜினியிடம் கூறி படத்தை ஓகே செய்து, தமிழ் சினிமாவிற்கு ஒரு மாபெரும் இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை கொடுத்துள்ளார் நெல்சன். ஒரு வேலை இப்போ அவர் ஃபீல் பண்ணுவாரோ என்னமோ..