நான் இடைஞ்சலா இருக்க விரும்பல.. பிக் பாஸில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி!
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து இன்று சுரேஷ் சக்ரவர்த்தி திடீரென வெளியேறி இருக்கிறார். அவர் ஏற்கனவே எலிமினேட் ஆகி வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த நிலையில் தற்போது உடல்நல குறைவு காரணமாக வெளியேறினார்.
மோசமான உடல்நிலை
நேற்று நடந்த டாஸ்கில் அவர் பங்கேற்றதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர் திடீரென இரவில் வாந்தி எடுக்க மற்றவர்கள் ஷாக் ஆனார்கள். அவரை அதன் பின் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின் மறுநாள் மதியம் தான் பிக் பாஸ் அவரை அழைத்து கன்பெக்ஷன் ரூமில் பேசினார். மருத்துவர்களிடம் பேசியதாகவும், அவர்கள் உங்களை ஷோவில் தொடர வேண்டாம் என பரிந்துரைத்து இருக்கிறார்கள் என்றும், அதனால் உங்களை வெளியில் எடுக்கிறோம் என பிக் பாஸ் கூறினார். அதை சுரேஷ் சக்ரவர்த்தி ஏற்றுக்கொண்டார்.
எமோஷ்னல்
"போட்டியாளராக எனக்கு வருத்தம் தான். ஆனால் ரசிகனாக இதை ஏற்று கொள்வேன். இந்த நிகழ்ச்சி நன்றாக செல்ல வேண்டும் என விரும்புகிறேன். "
"நான் இடைஞ்சலாக இருக்கிறேன் என தெரிந்தது. அதனால் அதிக ஏற்றுக்கொள்கிறேன். நான் உங்களை மிஸ் செய்ய மாட்டேன், ஷோ பார்த்துக்கொண்டு தான் இருப்பேன்" என சுரேஷ் சக்ரவர்த்தி எமோஷ்னலாக கூறினார்.
முதலமைச்சருக்கு போன் செய்த சூப்பர்ஸ்டார் ரஜினி.. எதற்காக தெரியுமா?