அஜித்திற்கு நிஜமாகவே மூளை ஆபரேஷன் நடந்ததா?- அவரது PRO தகவல்
நடிகர் அஜித்
நடிகர் அஜித் குறித்து கடந்த 2 நாட்களாகவே மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. காரணம் அவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்றுள்ளார், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் தெரிந்துகொண்ட ரசிகர்கள் அஜித்திற்கு என்ன ஆனது, ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என வருத்தமாக பதிவுகள் போட்டு வந்தனர்.
அதோடு அவருக்கு மூளையில் கட்டி உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டது.

உண்மை என்ன
தற்போது மருத்துவமனையில் அஜித்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையல்ல என்றும் கூறிய அவர், வழக்கமான பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அதற்கான சிகிச்சை அரை மணிநேரம் நடந்ததாகவும் கூறினார்.
அந்த சிகிச்சைக்கு பின்னர் நேற்று இரவே அஜித் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், இன்று இரவு அல்லது நாளை காலை அஜித் வீடு திரும்புவார் என்றும் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan