எங்கிருந்துடா வர்றீங்க? மாவீரன் பட விமர்சன வீடியோக்களுக்கு தயாரிப்பாளர் பதிலடி
மாவீரன்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாவீரன் படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களிலும் படத்தை பாராட்டி ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

தயாரிப்பாளர் ட்வீட்
இந்நிலையில் மாவீரன் படத்தின் முதல் ஷோ தொடங்கும் முன்பே Theater review என்ற பெயரில் youtubeல் அதிகம் வீடியோக்கள் வந்ததை பாரத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் கமெண்ட் செய்து இருக்கிறார்.
"எங்கிருந்துடா வர்றீங்க?! இன்னும் படமே ஆரம்பிக்கலை... ஒன்பது மணிக்குத்தான் முதல் ஷோவே... அதற்குள்ள பப்ளிக் ரிவிவ்யூ... எப்படிர்ராராராரா" என அவர் கேட்டிருக்கிறார்.
எங்கிருந்துடா வர்றீங்க?! இன்னும் படமே ஆரம்பிக்கலை... ஒன்பது மணிக்குத்தான் முதல் ஷோவே... அதற்குள்ள பப்ளிக் ரிவிவ்யூ... எப்படிர்ராராராரா @tfapatn @ThenandalFilms @iamarunviswa #maaveeran pic.twitter.com/RBqpnQqfMF
— sureshkamatchi (@sureshkamatchi) July 14, 2023
விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 7ல் இப்படி ஒரு பிரச்சனையா