பாட்ஷா படத்தை முதன் முதலில் இயக்கவிருந்தது இவர் தானா.. சுரேஷ் கிருஷ்ணா இல்லையா
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இதே சமயத்தில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்திலும் ரஜினி நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதன்பின் ஞானவேல் இயக்கவுள்ள தலைவர் 170 படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் கைகோர்த்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தலைவர் 171 படத்தை லோகேஷ் தான் இயக்க போவதாகவும், சமீபத்தில் தான் இப்படத்திற்கான போட்டோஷூட் நடைபெற்றது என்றும் தெரியவந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர்.
சுரேஷ் கிருஷ்ணா இல்லையா
ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கிய திரைப்படங்களில் ஒன்று பாட்ஷா. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஆனால், முதன் முதலில் இப்படத்தை இயக்கும் வாய்ப்பு மறைந்த நடிகரும், இயக்குனருமான மனோ பாலாவிடம் தான் சென்றதாம்.
அவரால் இப்படத்தை இயக்கமுடியாமல் போக சுரேஷ் கிருஷ்ணா அதன்பின் கமிட்டானார் என தகவல் கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.
முத்து பட புகழ் நடிகை சுபஸ்ரீயா இது, படு குண்டாக அடையாளமே தெரியலையே- Latest Click, ஷாக்கான ரசிகர்கள்