விஜய், அஜித் மட்டுமின்றி சூர்யா ரசிகர்களுக்கும் பொங்கல் விருந்து! காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்
பொங்கல்
நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த இரண்டு டாப் நடிகர்களும் மோதுவதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
விஜய், அஜித் ரசிகர்களுக்கு மட்டுமில்லை சூர்யா ரசிகர்களுக்கும் 2023 பொங்கல் கொண்டாட்டமாக இருக்க போகிறது. அதற்கு காரணம் சூர்யா தற்போது நடித்து வரும் சூர்யா 42 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவர இருப்பது தான்.
சூர்யா 42
சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று கதைக்களத்தில் உருவாகி வரும் சூர்யா 42 ஷூட்டிங் கோவாவில் நடைபெற்று வந்தது. அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளிலும் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.
ஹிந்தி நடிகை திஷா பாட்னி இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யாவின் லுக் எப்படி இருக்கும் என்று தான் தற்போது ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா, மருத்துவமனையில் அவரது மகள்- தற்போதைய நிலை