கற்பனைக்கு எட்டாத கதையாக இருக்கும் - சூர்யா 42 அப்டேட் கொடுத்த அப்படத்தின் கதாநாயகி!

Jeeva
in பிரபலங்கள்Report this article
சூர்யா 42
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் சூர்யா அடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில அவரின் 42-வது திரைப்படமாக உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.
பிரம்மாண்டமாக மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்படவுள்ள அப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.
மேலும் நேற்று இப்படத்தின் அதிகாரபூர்வ மோஷன் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். அதை கண்டு ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகினர்.
ஆம், அதன்படி மோஷன் போஸ்டரில் மிக பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக இப்படம் உருவாக இருப்பதை காண்பித்து இருந்தனர்.
திஷா பாட்னி
இந்நிலையில் தற்போது அப்படத்தின் கதாநாயகி திஷா பாட்னி சூர்யா 42 குறித்த சமீபத்தில் பேட்டியில் ஒன்றில் பேசியுள்ளார். அதில் “இப்படம் கற்பனைக்கு எட்டாத உலகத்தை பார்வையாளர்க்கு பெரிய திரையில் காண்பிக்கும்.
சூர்யா சாருக்கு நான் ஜோடியாக நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் தனித்துவமானது, இதுவரை நான் பார்த்திராத அவதாரத்தை ரசிகர்களுக்கு காட்ட அவலாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் முரளியின் அழகான மனைவியை பார்த்துள்ளீர்களா