தனுஷ் போன்று சூர்யாவும் அதை செய்கிறாரா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் ட்ரீட்
சூர்யா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து இருந்த கங்குவா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. படம் pan இந்தியா ஹிட் ஆகும் என படக்குழு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தது. ஆனால் ரிலீசுக்கு பிறகு வந்த நெகடிவ் விமர்சனங்கள் கடுமையாக வசூலை பாதித்து இருக்கிறது.
சுமார் ரூ. 350 கோடி செலவில் எடுத்த இந்த படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும், சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
அந்த வகையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா அவரது 44 - வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் கிலிப்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறுகின்றனர்.

மாஸ் ட்ரீட்
ஆனால் சூர்யாவின் 44 - வது படம் முழுக்க ஒரு காதல் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது. தற்போது இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அதற்கு காரணம் எங்கு தனுஷ் போன்று இனி காதல் தொடர்பான கதைக்களத்தில் சூர்யாவும் நடிக்கமாட்டாரோ என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் தற்போது சூர்யா 44 படம் காதல் கதைக்களத்துடன் அமைந்துள்ளதை அறிந்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri