கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யாவின் 44 - வது படம் ரெடி!.. ரிலீஸ் எப்போது தெரியுமா
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் 14 - ம் தேதி வெளிவர உள்ள படம் கங்குவா.
சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், நட்டி நட்ராஜ் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர்.
இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அவரது 44 - வது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.
ரிலீஸ்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் 28 - ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri
