சூர்யாவின் 45 - வது படத்தில் இணைந்த முன்னணி நடிகை.. வெளியான மாஸ் அப்டேட்
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் நவம்பர் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா.
10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக இருக்கும் இப்படத்தில் ஏஐ மூலம் அனைத்து மொழிகளிலும் சூர்யாவின் வாய்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யாவின் நடிப்பில் திரைக்கு வரும் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
மாஸ் அப்டேட்
இந்த படத்தில் முதலில் நடிக்க நடிகை மிருணாள் தாகூர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் சில காரணத்தினால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.
இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, சூர்யா 45 படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இது தான் அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
