சூர்யா 46 படத்தின் கதை இதுதானா.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்
சூர்யா 46
கருப்பு திரைப்படத்தை முடித்த கையோடு சூர்யா கமிட்டான திரைப்படம் 'சூர்யா 46'. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ நடித்து வருகிறார்.

மேலும் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், தயாரிப்பாளர் நாக் வம்சி இப்படத்தின் கதை குறித்து கூறியுள்ளார்.
படத்தின் கதை
45 வயதாகும் ஆணுக்கும் 20 வயதுடைய பெண்ணுக்கும் இடையே உள்ள ரிலேஷன்ஷிப்தான் இந்த படத்தின் கதை என்றும் கஜினி படத்தில் உள்ள பிளாஷ்பேக் காட்சி போல் இப்படத்தில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 25 வருடம் வயது இடைவெளி இருந்தாலும், அவர்களுக்குள் காதல் வந்ததா என்பதே கதை என்று அவர் தெரிவித்துள்ளார். சூர்யா 46 கதை குறித்து அவர் பேசியது தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

சூர்யா 46 படத்தை தொடர்ந்து சூர்யா 47 படத்தில் சமீபத்தில் கமிட்டானார் சூர்யா. இப்படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.2.35 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க கிரீடம்: புகைப்படம் எடுக்க முயன்று தட்டிவிட்ட சிறுவன்: வீடியோ News Lankasri