வெளிவந்தது கஜினி 2 படத்தின் அதிரடி அப்டேட்.. சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்
கஜினி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிசர் சூர்யா நடிப்பில் 2005 -ம் ஆண்டு கஜினி திரைப்படம் வெளியானது. இதில் அசின், நயன்தாரா எனப் பலரும் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, கஜினி படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் ஹீரோவாக அமீர் கான் நடித்திருப்பார்.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்து சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'.
இப்படம் வரும் 31 - ம் தேதி வெளிவர உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
கஜினி 2 அப்டேட்
இந்நிலையில், மும்பையில் அளித்த பேட்டியொன்றில் கஜினி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு சூர்யா பதிலளித்துள்ளார். அதில், " நீண்ட நாட்கள் கழித்து தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், 'கஜினி 2' படத்தின் ஐடியா உடன் வந்து இந்த படத்தை பண்ணலாமா என்று கேட்டார்.
அதற்கு, கண்டிப்பாக சார் என்று கூறியிருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இது தொடர்பான அப்டேட் வெளிவரும்" என்று கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
