குறை சொன்ன இயக்குநர் அவமானதில் கண்கலங்கிய நடிகர் சூர்யா ! ஷூட்டிங்கில் நடந்த விஷயம்
சூர்யா
நடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர். இவர் அடுத்தடுத்து பல முக்கிய இயக்குநர்களுடன் பணியாற்ற இருக்கிறார்.
பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
மேலும் சமீபத்தில் கூட நடிகர் சூர்யாவிற்கு சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவரின் இத்தனை வருட திரைபயணத்தில் தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.
அப்படியான சிறந்த நடிகராக திகழும் நடிகர் சூர்யா அரம்பத்தில் நடிக்க தெரியாததால் பல அவமானங்களை சந்தித்துள்ளார்.

அவமானத்தில் அழுத சூர்யா
அந்த வகையில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான திரைப்படம் நேருக்கு நேர், அப்படத்தை இயக்குநர் வசந்த் இயக்கியிருந்தார் விஜய் அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் இப்படம் குறித்து பழைய பேட்டியில் பேசியிருந்த சூர்யா “கொல்கத்தாவில் ஷூட்டிங், நடிப்பு எனக்கு சுத்தமா வரவே இல்லைனு யூனிட்டே கடுப்புல இருக்கும்போது லஞ்ச் பிரேக்.
இயக்குநர் வசந்த் சார் கிட்ட “சார், கல்த்தா பிரியாணி சூப்பர்னு சொன்னதும், அப்படியா..நல்லா சாப்பிடு ராச” என ஆற்றாமையோடு அவர் சொன்ன கணம், அப்படியே கூனிக் குறுகிப்போனேன்.
தலையணை நனைய நனைய நான் அழுததேன்” என சூர்யா பழைய ஒரு பேட்டியில் தான் அழுதது குறித்து பேசியுள்ளார்.

எழுந்திருக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அஜித்
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan