மீண்டும் பயோபிக் படத்தில் சூர்யா? இயக்குனர் யார் தெரியுமா
சூர்யா
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ஒரு வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். சூர்யா42 என அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மலையாள நடிகர் பிரித்விராஜ் உடன் தான் சூர்யா அடுத்து கூட்டணி சேர இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
இவரது பயோபிக் தானா?
பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் ராஜன் பிள்ளை வாழ்க்கை வரலாற்று கதையில் தான் சூர்யா நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. பிரித்விராஜ் தான் அதை இயக்க போகிறாராம். இருப்பினும் இது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.
பிரித்விராஜ் தற்போது இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம். ராஜன் பிள்ளையின் கதை பல்வேறு திருப்பங்கள் நிறைந்தது, அவர் சிறையில் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம்