இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ! லேட்டஸ்ட் தகவல்..
பிரம்மாண்டமாக உருவாகும் சூர்யாவின் திரைப்படம்
நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகி இருக்கிறார். ஏங்கு சென்றாலும் இவரின் திரைப்படங்கள் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது.
அதன்படி விக்ரம் திரைப்படத்தில் அவரின் ரொலக்ஸ் கதாபாத்திரம் செம வைரலானது, இதனால் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தின் மீது இப்போது ரசிகர்கள் ஆர்வம் அதிகமாகியுள்ளது என்றே கூறலாம்.
மேலும் அவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அப்டேட்ஸும் வந்தபடி உள்ளன, அந்த வகையில் சூர்யா 41 திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக்காகி வரும் சூரரை போற்று திரைப்படத்திலும் சூர்யா கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது சூர்யா இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தான் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், சிவா மற்றும் சூர்யாவின் திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையே தற்போது அந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும், அவர்கள் இணையும் திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெடில் உருவாகும் என தகவல் பரவி வருகிறது.
பெரிய பொருட்செலவில் உருவாகும் அப்படத்தில் முக்கிய இசையமைப்பாளர் பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய சீரியலில் நடிக்க தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய பிரபலம்- யாரு தெரியுமா?
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu