சூர்யா கொடுத்த வாய்ப்பில் வசூல் மன்னனாக மாறிய விஜய்.. பிரபல தயாரிப்பாளர் பேச்சு
தளபதி விஜய்
விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இதுவே அவருடைய கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவிற்கு நெருக்கமானவர்களில் ஒருவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவர் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். தற்போது சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தை கூட இவர் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பமாக இருந்தபோது விபத்தில் சிக்கி மரணமடைந்த நடிகை சௌந்தர்யா! அவருடைய கணவர் இவர் தான், புகைப்படம் இதோ
சூர்யா கொடுத்த வாய்ப்பு!
இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விஜய் மற்றும் சூர்யா சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து பேசியுள்ளாராம். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா என கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி படத்தின் கதையை சூர்யாவிற்காக தான் ஏ.ஆர். முருகதாஸ் எழுதினாராம். ஆனால், அதில் விஜய்க்கு நடிக்க சூர்யா வாய்ப்பு கொடுத்ததாக ஞானவேல் ராஜா பேசியுள்ளார். துப்பாக்கி தான் விஜய்யின் நடிப்பில் வெளிவந்து ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் திரைப்படமாகும்.
ஆகையால் சூர்யா கொடுத்த வாய்ப்பில் தான், துப்பாக்கி படத்தில் நடித்தார் என ஞானவேல் ராஜா பேசியதாக கூறப்படும் செய்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
