பான் இந்தியா இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா? எகிறும் எதிர்பார்ப்பு
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. தற்போது இவரின் 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை திஷா பாட்னி நடித்து வருகிறார். இப்படம் 3d தொழில்நுட்பத்தில், பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.
இதையடுத்து இவர் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

பிரம்மாண்ட கூட்டணி
பான் இந்தியா படமாக உருவான சீதா ராம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில் சீதா ராம் படத்தின் இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க போகிறாராம்.
இப்படமும் பான் இந்தியா படமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சீமான் இல்லனா வடிவேலுவை முடிச்சிருப்பேன்.. பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan