சூர்யாவின் கங்குவா பட நிலைமை என்ன, இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு?.. விவரம் இதோ
கங்குவா
தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த வருடத்தில் பெரிதும் எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் சூர்யாவின் கங்குவா.
சிவா இயக்கததில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் என ஏகப்பட்ட கலைஞர்கள் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியாக ரசிகர்கள் ஆவலாக பார்த்தனர்.
ஆனால் படத்தின் இசை, அளவு, காட்சியமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்து நிறைய எதிர்மறை விமர்சனம் வந்தது. இதனால் படக்குழு அதனை தாண்டி ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
திரையரங்குகளில் படம் வசூலில் சக்கை போடு போடும் என பார்த்தால் படத்திற்கு வந்த மோசமான விமர்சனங்களால் வசூல் பெரிய அளவில் பாதித்துவிட்டது. வரும் டிசம்பர் 12ம் தேதி இப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான இப்படம் மொத்தமாக ரூ. 115 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாக தெரிகிறது.