கங்குவா படத்தின் ப்ரோமோ வெளிவருவதில் தாமதம்- ஏன் தெரியுமா!
கங்குவா திரைப்படம்
நடிகர் சூர்யா தனது 42வது படமான கங்குவா படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
மேலும், இப்படத்தில் யோகி பாபு, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா என பலர் நடித்து வருகின்றனர். படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜு தீவுகள், கேரளா, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. கங்குவா படத்தின் முதல் ப்ரோமோ இந்த மாதம் வெளிவரும் என தகவல் வெளியானது.
ஆனால் தற்போது இப்படத்தின் ப்ரோமோ வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது சொல்லப்படுகிறது. அதன்படி கங்குவா திரைப்படத்தின் முதல் ப்ரோமோ சூர்யா பிறந்த நாளான அடுத்த மாதம் ஜூலை 22ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு முறை ஆபரேஷன், உதவாத உறவு- பல சோகங்களை கடந்துள்ள நடிகை சங்கவி, அவரது எமோஷ்னல் பதிவு